பிகில் விளையாட்டு - உணவுகள் ,இயற்கை, பொழுதுபோக்குகள், உலகம்,பொது அறிவு,வார்த்தையோடு விளையாடு,மூளைக்கு வேலை,மற்றும் தமிழ் சினிமாவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு எளிய புதிர் விளையாட்டு.
விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.உணவுகள் ,இயற்கை, பொழுதுபோக்குகள், மற்றும் தமிழ் சினிமாவை என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் நூற்றுக்கு மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் வழங்கியுள்ளோம் .இந்த பிகில் விளையாட்டு செயலி பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் போன்ற அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்.
இந்த பயன்பாட்டில் வழங்கப்பட்ட பல்வேறு முக்கிய பிரிவுகள்:-
உணவுகள்
பொழுதுபோக்குகள்
திரைப்படம்
திரைப்படத்தைக் கண்டுபிடியுங்கள்
இயற்கை
உலகம்
பொது அறிவு
வார்த்தையோடு விளையாடு
மூளைக்கு வேலை
ஒவ்வொரு முக்கிய வகையிலும் நான்கு துணை பிரிவுகள் உள்ளன, அவை மூன்று நிலைகளைக் கொண்டுள்ளன. வினாடி வினா கேள்விகள் இரண்டு வகைகளாக இருக்கலாம், ஒன்று உரை வடிவத்திலும் மற்றொன்று பட வடிவத்திலும் இருக்கும்.
கடிகை வசதி:-
ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க 25 விநாடிகள் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த 25 விநாடிகள் நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.
இந்த விளையாட்டில் நாங்கள் இரண்டு வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம்:-
2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம்.
சதவீதம் அடிப்படையிலான சரியான பதிலை தேர்வு செய்து விடலாம்.
அம்சங்கள்:-
2/2 விருப்பத் தேர்வு
சதவீதம் அடிப்படையிலான சரியான பதிலை தேர்வு செய்து விடலாம்.
ஐந்து வெவ்வேறு பிரிவுகள்
நூற்றுக்கு மேற்பட்ட கேள்விகள்
25 விநாடிகள் நேரம்
பயனர் விளையாட்டு பயன்முறையை தேர்வு செய்யலாம்
பயனர் விருந்தினராக விளையாட்டை விளையாடலாம் அல்லது அவர்கள் பேஸ்புக் உள்நுழைவு மற்றும் மின்னஞ்சல் உள்நுழைவு மூலம் விளையாடலாம்
விளையாட்டு பயன்முறையைத் இரண்டு முறையில் தேர்வு செய்யலாம். தனி ஆட்டம் மற்றொன்று நேருக்கு நேர்
ஒவ்வொரு கேள்விக்கும் கால அவகாசம் இருப்பதால், இது வினாடி வினாவை ஆர்வத்துடன் விளையாட உங்கள் ஆர்வத்தை அதிகரிக்கும்.இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து பிகில் விளையாட்டை இப்பொழுதே தொடங்கலாம் . இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்
Skich usa cookies y otras tecnologías para proporcionar, mejorar, asegurar y analizar sus servicios. Al hacer clic en «Aceptar todas», accedes a que usemos nuestras cookies y las de terceros conforme a la Política de cookies.